ஜனாதிபதிக்கு எதிரான மனநலகோளாறு மனு : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Published By: Vishnu

07 Jan, 2019 | 01:08 PM
image

அங்கொடை மனநல ஆய்வகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட  நீதிப் பேராணை மனுவினை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் வழக்குத் தாக்கல் செய்த நபருக்கு ஒரு இலட்சம் ரூபா பணம் செலுத்துமாறும் மேன் முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சிவில் செயற்பாட்டாளர் தக்சிலா ஜயவர்தனவின் ஆலோசனையின் பேரில், சட்டத்தரணி சிசிர குமார சிறிவர்தனவால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நீதிப்பேராணை மனு கடந்த ஆண்டு டிசெம்பர் 10 ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அண்மைய செயற்பாடுகள் காரணமாக அவர் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், அவரை உளவியல் ரீதியாக பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.

குறிப்பாக ஒக்டோபர் 26 ஆம் திகதிக்குப் பிறகு ஜனாதிபதியின் செயற்பாடுகளில் சந்தேகம் இருப்பதாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் குறிப்பிட்டனர். 

சரத்பொன்சேகாவும் இதே கருத்தினை முன்வைத்திருந்தார். இந்நிலையில், சிவில் செயற்பாட்டாளர் தக்சிலா ஜயவர்தனவின் ஆலோசனையின் பேரில், சட்டத்தரணி சிசிர குமார சிறிவர்தனவால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நீதிப்பேராணை மனு கடந்த ஆண்டு டிசெம்பர் 10ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.

அங்கொடை மனநல ஆய்வகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் மனுதாரர் அதில் கோரியிருந்தார்.

அத்துடன் இம் மனுவில் காவல்துறை மா அதிபருடன் கோட்டை தலைமையகப் காவல்துறை நிலைய பொறுப்பதிகாரியும் எதிர் மனுதாரராகக் குறிப்பிடப்பட்டிருந்தார்.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஜனாதிபதிக்கு மனநிலைப் பாதிப்பு என்று கூறிய மேன்முறையீட்டு நீதிமன்றில் மேற்செல் எனும் நீதிப்பேராணை மனுத் தாக்கல் செய்யப்பட்டதும் இது தான்.

எவ்வாறாயினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மனநிலை பாதிப்பு எனத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணை செய்யாமலே ஆரம்ப நிலையில் தள்ளுபடி செய்யக்கோரி இடைபுகு மனு ஒன்று கடந்த 4 ஆம் திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர சார்பில் அவரது சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையிலேயே  அங்கொடை மனநல ஆய்வகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட  நீதிப் பேராணை மனுவினை, மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17