நீதிமன்ற ஏல விற்பனையின்போது போலி ஆவணங்களை சமர்ப்பித்து விலை உயர்ந்த முக்கிய பொருட்களை தமதாக்கிக் கொண்டமை குறித்து நீதிமன்ற களஞ்சியப் பொறுப்பாளர் மொனராகலைப் பொலிசாரினால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் முதலாம் திகதி மொனராகலை நீதிவான் நீதிமன்றத்தினால் அரசுடமையாக்கப்பட்ட வழக்குகளுக்குரிய பொருட்களில், விலை உயர்ந்த முக்கிய பொருட்கள் பலவற்றை தமதாக்கிக் கொள்வதற்கு போலி ஆவணங்களை நீதிமன்றப் பதிவாளருக்கு சமர்ப்பித்து, நீதிமன்ற களஞ்சியப் பொறுப்பாளர் பெற்றுள்ளார். 

இது குறித்து பொலிசாருக்கு செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கிணங்க பொலிசார் விசாரணைகளின் பின்னர், களஞ்சியப் பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நீதிமன்ற ஏல விற்பனைப் பொருட்களில் முக்கியமான பொருட்களையும், பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.