ரூபாவின் பெறுமதி உயர்ந்தது

Published By: Robert

01 Apr, 2016 | 05:24 PM
image

கடந்த சில நாட்களாக ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுக் கொண்டிருந்த தொடர் வீழ்ச்சி நேற்றைய தினம் சற்று தேக்கப்பட்டுள்ளதுடன், ரூபாவின் பெறுமதியும் கூடியுள்ளது.

அந்த வகையில் இலங்கை மத்திய வங்கியினால் கடந்த வாரம் மார்ச் மாதம் 30 ஆம் திகதி வெளி யிடப்பட்ட நாணயமாற்று விகிதத்தின் பிரகாரம் அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 146.52 ரூபா வாக காணப்பட்டதுடன் அதன் விற் பனை பெறுமதி 150.54 ரூபாவாக காணப்பட்டது. இது ஒரு அமெரிக்க டொலர் 150 ரூபாவின்பெறுமதிக்கு நிகராகும். மேலும் இது இலங்கையின் வரலாறு காணாத நாணயப் பெறுமதி வீழ்ச்சியாகும்.

இந்நிலையில் இன்று இலங்கையின் ரூபா மதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் டொலரின் பெறுமதி 147 ரூபாவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்று ரூபா அளவில் டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right