2019 ஆம் ஆண்டுக்கான 35 ஆவது ஹார்பின் சர்வதேச பனி மற்றும் பனி சிற்ப விழா கடந்த 05 ஆம் திகதி சீனாவில் ஆரம்பமானது.

வட சீனாவின் ஹய்லாங்ஜியங் மாகாணத்தின் தலைநகரான குளிர்ப்பிரதேசமான ஹார்பின் நகரில், டிசம்பர், ஜனவரியில், மைனஸ் டிகிரி குளிர் நிலவும். உடலை உறைய வைக்கும் இந்த குளிரில், பனி சிற்ப திருவிழா நடக்கும். 

ஆண்டுதோறும் நடக்கும் இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இங்கு வருவர். 

இந்தாண்டுக்கான பனி சிற்ப திருவிழா, 2019 ஜனவரி 5 ஆம் ஆரம்பமாகியுள்ளது. 

சீனா ஹார்பின் நகரில் நடைபெற்று வரும் பனிசிற்ப போட்டியில் 12 நாடுகளைச் சேர்ந்த குழுவினர் பங்கேற்று உள்ளதுடன் மைனஸ் 10 டிகிரி குளிர் உள்ள நிலையில் 64 போட்டியாளர்கள் தங்களின் கைத்திறமையையும், கற்பனை வளத்தையும் காட்டி வருகின்றனர்.

பனிச்சிற்பங்களை கொண்டுள்ள இக்கண்காட்சி எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந் நிகழ்வில் இறுதி நாளில் சிறந்த சிற்பத்திற்கான பரிசுகளும் அளிக்கப்படும்.

ஹர்பினில் 1985 ஆம் ஆண்டில் இருந்து பனிச் சிற்பத் திருவிழா தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.