மீண்டும் வலுப்பெற்றது மஞ்சள் அங்கி போராட்டம் - பிரான்சின் பல இடங்களில் வன்முறை 

Published By: Digital Desk 4

07 Jan, 2019 | 11:34 AM
image

    பிரான்சில் மஞ்சள் அங்கி போராட்டம் மீண்டும் வலுப்பெற்று வரும் நிலையில் நாட்டின்  பல இடங்களில் வன்முறை வெடித்தது. 

பிரான்ஸ் நாட்டில், சுற்றுச்சூழலை காரணம் காட்டி பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை அரசு அதிகரித்தது.  இதனை எதிர்த்து கார் ஓட்டுனர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களுடன் பொது மக்களும் கைகோர்த்ததால் இந்த போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி உயர்வை கண்டித்து தொடங்கிய போராட்டம், அரசின் பல்வேறு கொள்கைகளுக்கு எதிராக திரும்பியதால் பெருந்திரளான மக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

கார் ஓட்டுனர்கள் அணியும் மஞ்சள் நிற அங்கிகளை அணிந்து கொண்டு மக்கள் போராட்டம் நடத்தியதால் இது மஞ்சள் புரட்சி என்றும், மஞ்சள் அங்கி போராட்டம் என்றும் அழைக்கப்பட்டது.

ஒவ்வொரு வாரத்தின் இறுதிநாட்களிலும் நடந்த இந்த போராட்டம் தலைநகர் பாரீஸை ஸ்தம்பிக்க வைத்தது. அதே சமயம் இந்த போராட்டத்தில் பல வன்முறையும் வெடித்தது. இதில் 10-க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

மக்களின் இந்த ஓயாத போராட்டம் அதிபர் மெக்ரானின் அரசுக்கு பெரும் தலைவலியாக அமைந்தது. இதையடுத்து போராட்டத்துக்கு அரசு பணிந்தது. பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி இ ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தொடர்ந்து 5 வாரங்களாக நடந்து வந்த மஞ்சள் அங்கி போராட்டத்தின் தீவிரம் சற்று குறைந்தது. எனினும் அதிபர் மெக்ரான் பதவி விலக வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் தொடர்ந்தது.

பாரீஸ் உள்பட பிற நகரங்களில் நடந்த போராட்டங்களில் குறைந்த அளவிலான மக்கள் மட்டும் பங்கேற்றனர். அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றதால் வன்முறை சம்பவங்கள் ஏதும் நிகழவில்லை.

இந்நிலையில் 8-வது வாரமாக நேற்று முன்தினம் நடந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் மஞ்சள் அங்கி போராட்டம் மீண்டும் வலுப்பெற்றது. மேலும் இந்த போராட்டத்தின் போது பல இடங்களில் வன்முறையும் வெடித்தது.

பாரீசில் செயின்ட் ஜெர்மைன் என்கிற இடத்தில் ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் தங்கள் கண்ணில் பட்ட பொருட்களுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானது.

அதேபோல், செயின் ஆற்றங்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் குவிந்த போராட்டக்காரர்கள் படகுகளுக்கும், சாலையில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களுக்கும் தீ வைத்தனர். இதையடுத்து வன்முறையை கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி, அவர்களை விரட்டி அடித்தனர்.

இந்நிலையில் மஞ்சள் அங்கி போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டதற்கு அதிபர் மெக்ரான் கடும் கண்டனம் தெரிவித்தார். மேலும் அவர் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் போராட்டத்தை கைவிட்டுவிட்டு ஆலோசனை மற்றும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52