லசித்மலிங்கவிற்கும் திசாரபெரேராவிற்கும் இடையிலான சமூக  ஊடக மோதல் குறித்து உள்ளகவிசாரணைகள் இடம்பெறும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஆஸ்லி டி சில்வா தெரிவித்துள்ளார்.

திசார பெரேராவும் அவரது மனைவியும் புதிய விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்துள்ளனர் என  லசித்மலிங்கவின் மனைவி சமூக ஊடகத்தில் பதிவு செய்த பின்னர் உருவாகியுள்ள சமூக ஊடக மோதல் குறித்தே விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

பன்டாக்கள் ஹரீன் பெர்ணான்டோவை சந்தித்துள்ளன என  லசித்மலிங்கவின் மனைவிகுறிப்பிட்டுள்ளார்

திசாரா பெரேராவை அணி வீரர்கள் பன்டா என அழைப்பது வழமை.

இதேவேளை சமூக ஊடகங்களில் ஒரே அணியை சேர்ந்த இரு வீரர்கள் மோதிக்கொள்வதை நிறுத்தமுடியாத நிலையில் அணியின் முகாமையாளர்கள் காணப்படுகின்றமை இரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளதை தொடர்ந்து அணியின் முகாமைத்துவத்திற்கு எதிராக சமூக ஊடகங்களில் கடும் அதிருப்தி வெளியாகியிருந்த நிலையிலேயே ஆஸ்லி டி சில்வாவின் கருத்து வெளியாகியுள்ளது

இரு வீரர்களும் ஒழுக்காற்று விதிமுறைகளை மீறியமை கண்டுபிடிக்கப்பட்டால் கடுமையான தண்டனைகள் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

லசித் மலிங்க தனது சமூக ஊடக  பிரச்சாரங்களிற்காக பலரை பணிக்கு அமர்த்தியுள்ளார்,திசார பெரேராவும் அவரது மனைவியும் விளையாட்டுத்துறை அமைச்சரை சந்தித்தனர் என்ற தகவல் மலிங்கவின் சமூக ஊடகங்கள் மூலம் வெளியாகியிருக்கலாம் என ஐலண்ட் நாளிதழ் தெரிவித்துள்ளது