பயிர் செய்கையை பாதிக்கும் சேனாகம்பளிப்பூச்சி  வகையினை கட்டுப்படுத்துவது தொடர்பான அறிக்கையின் பரிந்துரைகள் இன்று முதல் அமுல்படுத்தப்படவுள்ளதாக விவசாயத்துறை இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் குறிப்பிட்ட அவர், 

சேனா பூச்சியின் தாக்கம் காரணமாக, நாட்டின் பல பாகங்களில் பயிர்ச் செய்கை பாதிப்படைந்துள்ளன. இவற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான அறிக்கையை பேராதனை பல்கலைக்கழகம் தயாரித்து, விவசாய அமைச்சிடம் கையளித்துள்ளது. அதில் வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை இன்று முதல் அமுல்படுத்தப்படும்.

இந்த கம்பளிப்பூச்சி முதலில் நைஜீரியாவில் காணப்பட்டுள்ளது. இலங்கையில் மூன்று மாவட்டங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  ஒரு வகையான இடைவிடாத வாசனையை கொண்டிருக்கும் இந்த வகை புழுக்கள் ஒரே இரவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களை அழிக்கும். ஒரு புழு ஒரு தடவையில் 200 முட்டைகள் இடும். கம்பளிப்பூச்சு ஆரம்ப  பருவத்தில் பச்சையாக இருக்கும். அதன்பின்னர் பழுப்பு நிறமாக மாறும்.

இதப் உடல் முழுவதும் பருக்கள் போன்று காணப்படும். தலையின் கீழ் 'ய' எழுத்து போன்று வடிவம் காணப்படும்.  பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் மிக ஆபத்து வாய்ந்தது எனவும் அவர் குறிப்பிட்டார்.