ஆப்கானிஸ்தான் நாட்டின் படாக்ஷான் மாகாணத்தில் இன்று தங்கச் சுரங்கம் சரிந்து விபத்துக்குள்ளானாதல் 30 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ்தானின் வடகிழக்கில் அமைந்துள்ள படாக்ஷான் மாகாணத்துக்குட்பட்ட கோஹிஸ்தான் மாவட்டத்தில் உள்ள ஆற்றுப்படுகை பகுதியில் வசிக்கும் மக்கள் சுற்றுப்புற பகுதிகளில் பூமிக்கு அடியில் தங்கம் கிடைப்பதாக நம்புகின்றனர்.
இதனால், அரசின் உரிய அனுமதி பெறாமல் அவர்களே சொந்தமாக சுரங்கம் வெட்டி தங்கம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வகையில், சுமார் 200 அடி ஆழத்தில் தோண்டப்பட்ட ஒரு சுரங்கத்துக்குள் சிலர் இன்று பணியாற்றி கொண்டிருந்த போது, அந்த தங்கச் சுரங்கம் திடீரென்று சரிந்து விழுந்தது.
இந்த விபத்து தொடர்பான தகவல் அறிந்ததும் மீட்பு படையினர் அங்கு விரைவதற்குள் களமிறங்கிய உள்ளூர் மக்கள், இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த 30 பேரின் உடல்களை மீட்டுள்ள நிலையில். தொடர்ந்து அங்கு மீட்பு பணிகள் இடம்பெற்று வருவதாக படாக்ஷான் மாகாண கவர்னரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM