தன் கணவர் குளிப்பதே இல்லை. தீபாவளி, ஹோலிக்கு மட்டுமே குளிக்கிறார் என்று பெண் ஒருவர் பொலிஸில் முறைப்பாடளித்துள்ளமை உத்தரபிரதேசத்தில் பெரும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பாக்பட் நகரை சேர்ந்த ஒரு பெண் மாவட்ட பொலிஸ் அதிகாரியிடம் இது தொடர்பில் அளித்துள்ள முறைப்பாட்டில், தனது கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மாதா மாதம் கூட குளிப்பது இல்லை. கடந்த ஆண்டு தீபாவளிக்கு குளித்தனர். பின்னர் 5 மாதம் கழித்து தற்போது ஹோலி பண்டிகைக்கு குளித்துள்ளனர். சுத்தமாக இருப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாவட்ட பொலிஸ் அதிகாரி ரவி சங்கர் இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் கூறும் போது, "கணவர் மாதத்திற்கு ஒரு முறை கூட குளிப்பது இல்லை எனவும் சுத்தமாக இருங்கள் என கூறிய மனைவிக்கு கொலை மிரட்டலும் விடுத்து உள்ளார். அந்த பெண் அவரது குடும்பத்தினரிடம் சுகாதாரத்தை பரமாரிக்க கேட்டு கொண்டு உள்ளார். ஆனால் அவர்கள் அதை புறக்கணித்து வியாபாரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு இருந்துள்ளனர். மேலும் அவர்கள் அந்த பெண்ணை அவமானப்படுத்தி உள்ளனர் என்றார்.

பொலிஸ் அதிகாரி ரவி சங்கர் இந்த முறைப்பாட்டை பெண்கள் பொலிஸ் நிலையத்திற்கு அனுப்பி வைத்து உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.