(எம்.மனோசித்ரா)

வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பங்களாவத்தை பிரதேசத்தில் வென்னப்புவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் ஆமை இறைச்சி மற்றும் முட்டையுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களிடமிருந்து 35 கிலோ கிராம் ஆமை இறைச்சி மற்றும் 422 ஆமை முட்டைகள் என்வற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர்கள் 52 மற்றும் 37 வயதுடையவர்கள் எனவும் வென்னப்புவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த சந்தேகநபர்கள் இருவரும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.