(எம்.மனோசித்ரா)

வடக்கில் செயற்பட்ட பயங்கரவாத அமைப்பான விடுதலைப் புலிகளின் தலைவரனான பிரபாகரன் முதற்கொண்டு, மஹிந்தராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டோர் ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக செயற்பட்ட போது அதனைத் தோற்கடித்து அனைத்து சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசிய கட்சியே நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்தியது என பாரிய நகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க தெரிவித்தார்.

 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.