(நெவில் அன்தனி)

இளையோர் ஆசிய வலைபந்தாட்டப் போட்டியில் பங்குபற்றவுள்ள இலங்கை இளையோர் வலைபந்தாட்ட அணிக்கு தகுதி மிக்க பயற்றுநர் ஒருவரைத் தெரிவு செய்ய இலங்கை வலைந்தாட்ட சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

போதிய அனுபவம், செயன்முறை ஆற்றல்கள் மிக்க வலைபந்தாட்டப் பயிற்றுநர்களை இப் பதவிக்கு விண்ணப்பிக்குமாறு இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. 

தகுதிவாய்ந்த பயிற்றுநர்கள் தங்களது விண்ணப்பங்களை எதிர்வரும் 15ஆம் திகதி (15.01.2019) அல்லது அதற்கு முன்னர் செயலாளர், இலங்கை வலைபந்தாட்ட சம்மேளனம், இல. 33, டொரிங்டன் பழைய கட்டடம், டொரிங்டன் மைதானம், கொழும்பு 7. என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்படுகின்றனர். விண்ணப்பங்களை வலைபந்தாட்ட சம்மேளன அலுவலகத்தில் நேரடியாகவும் சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பப் படிவம் அடங்கிய உறையின் மேல் இடது மூலையில் ‘‘பயிற்றுநருக்கான விண்ணப்பம்’’ என விண்ணப்பதாரிகள் குறிப்பிடவேண்டும்.

ஜப்பானின் கஷிமா அரங்கில் எதிர்வரும் ஜூன் மாதம் 30ஆம் திகதிமுதல் ஜூலை மாதம் 7ஆம் திகதிவரை நடைபெறவுள்ள இளையோர் ஆசிய வலைபந்தாட்ட வல்லவர் போட்டிகளை முன்னிட்டே பயிற்றுநர் ஒருவர் தெரிவுசெய்யப்படவுள்ளதாக இலங்கை வலைப்நதாட்ட சம்மேளனம் தெரிவித்தது.