மஹாவலி பாரிய திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இறுதி நீர்த்திட்டமான மொரஹகந்த களுகங்கை நீர்த்தேக்க திட்டத்தின் அணைக்கட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்படவுள்ளது.

இதற்காக 450 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க திட்டத்தின் மூலம் மூவாயிரம் குடும்பங்களுக்கு நீர் வழங்கப்படுகிறது. 

நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் நாட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள பாரிய பல்நோக்கு அபிவிருத்தி திட்டம் மொரகஹகந்த - களுகங்கை நீர்த்தேக்கமாகும் என்பதுடன், இது இலங்கையின் அபிவிருத்தி பணிகளில் முக்கியமானதொரு சந்தர்ப்பமாகும்.