இந்தியாவுக்கு எதிராக இடம்பெற்று வரும் இறுதி டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 300 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து. பலோஒன் ஆனது.

சிட்னியில் நடைபெற்று வரும் இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதல் இன்னிங்ஸுக்காக 7 விக்கெட் டஇழப்பிற்கு 622 ஓட்டங்களை குவித்த நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்தியது.

அதன்பின் முதல் இன்னிங்ஸை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது 6 விக்கெட்டுக்களை இழந்து 236 ஓட்டங்களை குவித்திந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

ஆடுகளத்தில் ஹேண்ட்ஸ்காம்ப் 28 ஓட்டத்துடனும், பேட் கம்மின்ஸ் 25 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 

இந் நிலையில் இன்றைய நான்காம் நாள் ஆட்டம் மழை காரணமாக ஆரம்பமாகவதற்க தாமதம் ஆகியது. மதிய உணவு இடைவேளை வரை போட்டி ஆரம்பமாகவில்லை. அதன் பின்னர் போட்டி தொடங்கியதும் 25 ஓட்டங்களை பெற்றிருந்த பேட் கம்மின்ஸ் ஷமியின் பந்தில் போல்ட் முறையில் ஆட்டமிழக்க ஹேண்ட்ஸ்காம்ப் 37 ஓட்டத்துடன் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். 

அடுத்து வந்த நேதன் லியோன் ஓட்டம் எதுவும் பெறாதுகுல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் அவுஸ்திரேலிய 258 ஓட்டங்களுக்குள் 9 விக்கெட்டுக்களை பறிகொடுத்தது.

எனினும் இதனையடுத்து இறுதி விக்கெட்டுக்காக ஸ்டார்க்குடன் ஹேசல்வூட் ஜோடி நிதானமாக ஜோடி சேர்ந்தாட அவுஸ்திரேலிய அணி 300 ஓட்டங்களை தொட்டது. எனினும் 21 ஓட்டங்கள் எடுத்திருந்த ஹேசல்வீட் குல்தீப் யாதவ்வின் சுழலில் சிக்கி ஆட்டமிழக்க அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸிக்காக அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 300 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது.

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுக்களையும், மொஹமட் ஷமி மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும், பும்ரா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார். 

இதனால் இந்தியாவை விட ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 322 ரன்கள் பின்தங்கியதால் பலோஒன் ஆகி துடுப்பெடுத்தாடி வர விக்கெட் இழப்பின்றி 6 ஓட்ங்களை குவித்திருந்தவேளை ஆட்டம்  இடை நிறுத்தப்பட்டது.