ஆப்கானிஸ்தானில் இராணுவத்தின் சிறப்பு அதிரடிப்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் தலீபான் தீவிரவாதிகள் 15 பேர் உயிரிழந்துள்ளனர். 

ஆப்கானிஸ்தானின் பர்யாப் மாகாணத்தில் உள்ள அல்மார் மாவட்டத்தில் சில பகுதிகளில் தலீபான் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக இராணுவத்துக்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக அப் பகுதியை சுற்றிவளைத்து, தீவிரவாதிகள் மீது திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதனால் சம்பவ இடத்திலேயே 15 தலீபான் தீவிரவாதிகள் உயிரிழந்ததுடன், ஏராளமான தீவிரவாதிகளின் பதுங்குக் குழிகளும் அழிக்கப்பட்டன.