பாகிஸ்தான், பெஷாவர் நகரில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் பெண் உட்பட நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் சத்தார் பகுதியில் கலாபாரி என்னும் சந்தைக்கருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றிலேயே இந்த குண்டு வெடிப்பு இடம்பெறறுள்ளது. இதன்போது தூக்கி வீசப்பட்ட பெண் உட்பட நால்வர் படுகாயம் அடைந்ததுடன், 12 கடைகள் சேதத்துக்குள்ளாகின.

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொலிஸார் காயம் அடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததுடன், இது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.