ஸ்ரீ லங்கன் விமான சேவையை மறுசீரமைப்பதற்கான ஆராய்வுகளை முன்னெடுத்து பரிந்துரைப்பதற்காக ஐவர் கொண்ட குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நாளை நியமிக்கப்படவுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான சேவையில் காணப்படும் பிரச்சினைகளை தீர்த்து, அதனை மறுசீரமைப்பதற்கு தேவையான கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை பெற்று பரிந்துரைகளை முன்வைப்பதற்காக மேற்படி குழு நியமிக்கப்படவுள்ளது. 

இக் குழுவின் மூலம் ஸ்ரீலங்கன் விமான சேவையை முன்னேற்றகரமாக கொண்டு செல்வதற்கான முன்மொழிவுகள் மற்றும் கருத்துக்களை குறித்த குழுவுக்கு கையளிப்பதற்கு அனைத்து தரப்பினர்களுக்கும் சந்தரப்பம் கிடைக்கவுள்ளது. 

மேலும் இக் குழு, இரண்டு வார காலப் பகுதியில் அதன் பரிந்துரைகள் ஜனாதிபதிக்கு முன்வைக்க வேண்டும் என்பதோடு, அதன் பரிந்துரைகள் கவனத்திற்கு கொண்டு ஸ்ரீ லங்கன் விமான சேவை தொடர்பான அடுத்த கட்ட தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.