கரைச்சி பிரதேச சபைக்கு இரண்டு துப்பாக்கிகள் நேற்றைய தினம் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சபை அமர்வில் வன்னேரிக்குளம் வட்டார உறுப்பினர் செல்வநாயகத்தினால் குரங்கு தொல்லையிலிருந்து மக்களையும் விவசாயிகளையும் பாதுகாத்தல் என்ற பிரேரணையின் அடிப்படையில் துப்பாக்கிகளை கொள்வனவு செய்யும் தீர்மானம் எடுக்கப்பட்டது. 

அதனடிப்படையில் இருபத்தியொரு வட்டாரங்களிலும் குரங்குகூட்டத்தின் படையெடுப்பு காரணமாக விவசாய உற்பத்திகள் பயன்தரு மரங்கள் பெருமளவில் சேதமடைந்து வருகிறது. இதனை தடுத்து நிறுத்துமாறு பல்வேறுபட்ட தரப்பினரின் கோரிக்கைக்கு அமைவாக முதற்கட்டமாக இரண்டு துப்பாக்கிகள் நேற்று இரண்டு இலட்சம் ரூபா செலவில் கொள்வனவு செய்யப்பட்டது.

இத் துப்பாக்கிகளை பயன்படுத்தி புகைக்குண்டுகளை ஏவுவதன் மூலமாக குரங்குகளை கலைத்து விடுகின்ற செயற்பாடு ஆரம்பிக்கப்படவுள்ளது என கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் தெரிவித்தார்.