காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான்குளத்தில் இன்று மாலை  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளாதுடன் மேலும் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் கிரான்குளத்து வளைவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டர் சைக்கிள்  நிறுத்திவைக்கப்பட்டிருந்த துவிச்சக்கரவண்டியுடனும் மோட்டார் சைக்கிளுடனும் மோதி பின்னர் வேலிக்கு நடப்பட்டிருந்த  கொங்கிறீட் தூண்களையும் உடைத்துக் கொண்டு வளைவொன்றினுள் புகுந்துள்ளது. 

இதன் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த துவிச்சக்கர வண்டியும், மோட்டர் சைக்கிளும் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

விபத்து சம்பத்தில் உயிழந்தவரும் காயமடைந்தவரும் கிரான்குளத்தினை சேர்ந்தவர்கள் என்பதுடன் இருவரும்  உறவினர்கள் எனவும் தெரியவருகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.