அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் கேளிக்கை விடுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

கலிபோர்னியா மாநிலத்தின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டாரன்ஸ் பகுதியில் அமைந்துள்ள கேளிக்கை மையத்தில் இன்று திடீரென துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது.

குறித்த  தாக்குதலில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததோடு மேலும், 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் பாதிக்கப்பட்ட அனைவரும் ஆண்கள் என பொலிஸார் தெரிவித்த நிலையில் இது தொடர்பாக,  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த ஆண்டில் சுமார் 40,000 பேர் துப்பாக்கி சூடு தொடர்புடைய சம்பவங்களில் பலியானதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது,