(எம்.மனோசித்ரா)

சபாநாயகர் கருஜய சூரியவின் அறிவிப்பிற்கு இணங்க எதிர்வரும் 8 ஆம் திகதி செவ்வாய்கிழமை பாராளுமன்ற அமர்வின்போது மஹிந்தராஜபக்ஷ எதிர்கட்சி தலைவர் ஆசனத்திலும், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்கள் எதிர்கட்சி ஆசனத்திலும் அமர்வார்கள் என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். 

மேலும் எதிர்கட்சி காரியாலயம் மற்றும் எதிர்கட்சி தலைவரின் உத்தியோகபூர்வ இல்லம் ஆகியவற்றையும் ஒப்படைக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. 

எனவே 8 ஆம் திகதியிருந்து எதிர்கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் எதிர்கட்சியாக எமது நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளோம். இதன்போது நடைபெறவேண்டிய தேர்தல்களை உரிய காலப்பகுதிக்குள் நடத்துவதற்கு தொடர்ச்சியாக அழுத்தங்களை பிரயோகிப்போம் என்றார்.