(ஆர்.விதுஷா) 

நாடுபூராகவும் கடந்த வருடம் மேற்கொள்ளப்பட்ட விஷேட சுற்றிவளைப்புகளில்  40,290  பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார். 

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் ஆலோசனைக்கமைய  14 விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் கடந்த வருடம் முன்னெடுக்கப்பட்டிருந்தது. 

இவ்வாறாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களின் பிடியாணை பிறப்பிக்கிப்பட்டவர்கள்  12, 984 பேர் வரையிலும் மது போதையில் வாகனம் செலுத்தியமை தொடர்பில்  7094 பேர் வரையில் கைது செய்யப்பட்டும் உள்ளனர். 

அத்துடன், விஷ போதைப்பொருள் மற்றும் சட்டவிரோத மதுபாவனை தொடர்பில்  9,087  பேரும் சட்டவிரோதமான முறையில்   துப்பாக்கி வைத்திருந்தமை தொடர்பில்  49 பேர் பேரும்  கைது செய்யப்பட்டுள்ளனர். 

இந் நிலையில்  பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய  1, 0305 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,  சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும்  குற்றச்செயல்களுடன் தொடர்புடைய  771 சந்தேக நபர்களும் உள்ளடங்கலாக 14 விசேட நடவடிக்கைகளின் போதும் சுமார்  40, 290 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும்,  6,9, 693 போக்குவரத்து வளக்குகள் பதிவாகியுள்ளதாகவும்  ருவாண் குணசேகர மேலும் தெரிவித்தார்.