வடக்கில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 43 ஆயிரத்து 48ஏக்கர் வரையான பயிர்ச்செய்கைகள் அழிவடைந்துள்ளதாக கிராமிய பொருளாதார விவசாய மற்றும் கால்நடை கமதொழில் நீரப்பாசன அமைச்சினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளர் அமைச்சரக அதிகாரிகள்வெள்ளப்பாதிப்புக்கள் தொடர்பில் மாவட்டச்செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டதுடன், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவிவசாய நிலங்களையும்,சென்று பார்வையிட்டனர்.

இன்று பகல் 10.30 மணிக்கு மாவட்டச்செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் போது வடக்கில்,முல்லைத்தீவு,கிளிநொச்சி யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களில் 43 ஆயிரத்து 48 ஏக்கர் பயிர்செய்கைகள் வெள்ளத்தினால் அழிவடைந்துள்ளதாகவும் இதில் சோளச்செய்கை பத்து ஹெக்டேயர் நிலக்கடலை 1500 ஏக்கர் என்பனவும் அழிவடைந்திருப்பதாகவும் இது தொடர்பான மதிப்பீடுகள் இரண்டு வாரங்களுக்குள் மேற்கொள்ளமுடியும் என்று தெரிவித்த அமைச்சின் செயலாளர் நாயகம் கிளிநொச்சி மவட்டத்தில் வெள்ளத்தினால் 28 வரையான குளங்கள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், 2018 ம் ஆண்டிலே புனரமைப்புப்பணிகள்மேறகொள்ளப்பட்டுள்ள பத்து வரையான குளங்களின் புனரமைப்புப்பணிகளும்பாதிக்கப்பட்டுள்ளன.

இவற்றை அபிவிருத்தி செய்வதற்காக 31 மில்லியன் ரூபா நிதிதேவையென மதிப்பிடப்பட்டிருப்பதாகவும் இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏழு வரையான குளங்கள் சேதமடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.