சுமார் 12 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவரைக் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு கிடைத்த  இரகசிய தவகலின் அடிப்படையில்  சுற்றிவளைப்பை மேற்கொண்ட பொலிஸார் குறித்த நபரை போதைப்பொருளுடன் கைதுசெய்துள்ளனர். 

மக்கொன - கிதுலஹென பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 

உள்ளாடையில் மறைத்து வைத்திருந்த 101 கிராம் 386 மில்லி கிராம்  கொண்ட 12 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் குறித்த நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மக்கொன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.