பலரும் ஆரோக்கிய மேம்பாட்டிற்காகவும், உடல் நல தற்காப்பிற்காகவும் யோகா பயிற்சியை தினமும் மேற்கொள்ளத் தொடங்கியிருக்கிறோம். சிலர் இதற்காக பிரத்யேகமாக இயங்கும் பயிற்சி மையத்திற்கு சென்று யோகாவை மேற்கொள்கிறார்கள்.

அதன் போது யோகாவை செய்வதற்காக ஒரு தரைவிரிப்பை பயன்படுத்துவார்கள். அதன் மீது அமர்ந்து தான் யோகா பயிற்சியை செய்யவேண்டும் என்று வலியுறுத்துவார்கள். ஆனால் இன்று அந்த தரைவிரிப்புகளே ஆரோக்கியத்திற்கு கேடுவிளைவிக்கிறது என்று எச்சரிக்கிறார்கள் வைத்திய நிபுணர்கள்.

அதாவது அந்த தரை விரிப்புகள் வெவ்வேறு தளங்களில் பயன்படுத்திவிட்டு, அதனை சுத்தப்படுத்தும் போது அதில் ட்ரைக்ளோசான் என்ற வேதியல் பொருள் ஒட்டிக் கொண்டுவிடுகிறது. இது உடலுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நுண்ணுயிரி என்கிறார்கள் வைத்திய ஆய்வாளர்கள்.

இதனை அறியாமல் தொடர்ந்து யோகாவிற்கான பிரத்யேகமான தரைவிரிப்பை பயன்படுத்தும் போது, சிலருக்கு தோல் எரிச்சல், ஒவ்வாமை, நாளமில்லா சுரப்பிகளின் செயற்பாட்டில் இடையூறு, தைரொய்ட் சுரப்பி பாதிப்பு, ஓஸ்துமா பாதிப்பு, எக்ஸீமா போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தெரிவிக்கிறார்கள்.

அதனால் ஒவ்வொரு முறை யோகா செய்வதற்கு முன் அதற்கான தரைவிரிப்பு சுத்திகரிக்கப்பட்டதா? நுண்ணுயிரிகள் பாதிப்பு இல்லாமல் இருக்கிறதா? என்பதை சோதித்த பின்னரே யோகா பயிற்சியை தொடங்குங்கள். உங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துங்கள்.