நற்குண முன்னேற்ற அமைப்பு மூலம் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், குருவி மக்கள் மன்றத்துடன் இணைந்து கம்பளை கல்வி வலயத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட 38 பாடசாலைகளின் மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வு நாவலப்பிட்டி லோட்டஸ் கலாச்சார மண்டபத்தில் இன்று காலை 10 மணியளவில் இடம்பெற்றது.

இதன்போது 38 பாடசாலைகளிலும், 550ற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வின் போது, கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன், நற்குண முன்னேற்ற அமைப்பின் உறுப்பினர்கள், கம்பளை கல்வி வலய அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.