(எம்.மனோசித்ரா)

கூட்டமைப்பால் முன்வைக்கப்படவுள்ள அரசியலமைப்பு சட்ட மூலம் எந்த தரப்பினராலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே அமையும். காரணம் அவர்களின் நோக்கம் நாட்டை இரண்டாக பிளவடையச் செய்வதாகும். தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான கட்சியாக இருந்து கொண்டு அவர்கள் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய வகையில் எதனையும் செய்ததில்லை என பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 

எதிர்வரும் பெப்ரவரி மாதம் புதிய அரசியலமைப்பிற்கான சட்ட மூலம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறித்து வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.