நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கிவைத்துள்ளார்.

இன்று முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட நீதி அமைச்சர் தலதா அத்துக்கோரள, முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 490 குடும்பங்களுக்கு உதவி பொருட்களை வழங்கிவைத்துள்ளார்.

இந் நிகழ்வில் நீதிஅமைச்சின் செயலாளர் மற்றும் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன்,பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கான உதவிப்பொருட்களை வழங்கிவைத்துள்ளார்கள்.