(எம்.ஆர்.எம்.வஸீம்)

அமைச்சுப் பதவிகள் வழங்கப்படாத ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களுக்கு மாற்றுவழியொன்றை ஏற்படுத்தி அவர்களுக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொடுக்கவேண்டும். அத்துடன் அமைச்சுப்பதவி கிடைத்த சிலருக்கு தங்கள் ஆதரவாளர்களுக்கு சேவைசெய்ய முடியாத நிலையும் இருக்கின்றது என அமைச்சரவை அற்ற அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி பின்வரிசை உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படப்போவது தொடர்பில் தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

மஹிந்த ராஜபக்ஷ் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணைந்து கடந்த மாதம் மேற்கொண்ட அரசியல் சதித்திட்டத்தின்போது, அதனை வெற்றிகொள்ள எமது பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்கள் பல அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டனர். அவர்களின் அர்ப்பணிப்புக்கு நிச்சயமாக நாங்கள் பிரதி உபகாரம் செய்யவேண்டும்.