வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவரின் கவனயீன்மை: வேலைக்காக வெளிநாடு சென்ற பணிபெண் உயிரிழப்பு

Published By: R. Kalaichelvan

04 Jan, 2019 | 04:23 PM
image

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியிலுள்ள தலைமைக்குடும்ப பெண் ஒருவர் கடந்த வருடம் மத்திய கிழக்கு நாடு ஒன்றிற்கு பணிப்பெண்ணாக சென்றுள்ளார். 

இந்நிலையில் கொழும்பிலுள்ள முகவர் ஒருவரின் தவறினால் அப்பெண் கடந்த 4 மாதங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டுள்ளதுடன் அவரது சடலம் நான்கு மாதங்களுக்குப் பின்னரே இழுத்தடிப்பு செய்யப்பட்டு கடந்த சனிக்கிழமை இலங்கைக்கு எடுத்துவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், 

வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் 5பிள்ளைகளுடன் கணவனை இழந்த நிலையில் வசித்து வந்த குமாரவேல் அன்னக்கிளி வயது 54 கடந்த வருடம் 18.04.2018 அன்று மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியாவிற்குச் சென்றுள்ளார். அந்நாட்டிற்குச் சென்று எட்டு மாதங்கள் ஆகின்ற போதிலும் நான்கு மாதங்கள் அவருடனான தொடர்பு இருந்துள்ளது. எனினும் நடந்த நான்கு மாதங்களாக உறவினருடன் எவ்வித தொடர்புகளும் ஏற்படுத்தப்படவில்லை. 

எனினும் பல தடவைகள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்ணாக பணியாற்றிய அனுபவத்தில் கடந்த வருடமும் தனது குடும்ப வருமானத்திற்காகவும் தனது பிற்காலத்தின் தேவைக்காகவும் பல்வேறு எதிர்பார்ப்புக்களுடன் கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஒருவர் ஊடாக சென்றுள்ளார். 

எனினும் அப்பெண் அந்நாட்டிற்குச் சென்றதிலிருந்து அவர் முகவருடன் தொடர்புகொண்டு தனக்கு கிடைக்கப்பட்ட வேலை இடத்தில் பல்வேறு துன்புறுத்தல்கள் வேலைகள் அதிகரித்துள்ளதால் தன்னை அங்கிருந்து வேறு இடம் ஒன்றில் வேலைக்கு அமர்த்துமாறு அல்லது தன்னை நாட்டிற்கு அழைத்துக்கொள்ளுமாறு தெரிவித்து வந்துள்ளார். 

இவ்விடயத்தில் முகவர் சரியான முடிவினை எடுக்காமலும் குறித்த பெண்ணின் எதிர்காலம் குறித்து நடவடிக்கை மேற்கொள்ளத்தவறியுள்ளதுடன் காலம் தாழ்த்தி அவரது கருத்தை செவிமடுக்காமலும் நீண்டகாலம் இழுத்தடிப்புச் செய்து வந்துள்ளார். இந்நிலையில் அப் பெண் கடந்த 12.08.2018 அன்றைய தினம் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக நீண்ட நாட்களின் பின்னர் அந்நாட்டிலிருந்த உறவினர் ஒருவர் ஊடாக வவுனியாவிலிருக்கும் உறவினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. எனினும் இத்தகவல் உத்தியோக பூர்வமற்றதாக நினைத்து தகவல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 

நீண்ட நாட்களின் பின்னரும் அவருடனான தொடர்பு கிடைக்கவில்லை. கொழும்பிலுள்ள முகவருடன் தொடர்புகொண்டபோது கூட அம்முகவர் தங்களுக்கு இத்தகவல் கிடைக்கவில்லை வெளிநாட்டு வேலைவாப்புப்பணியகத்துடன் தொடர்புகொள்ளுமாறு முகவரினால் பணிக்கப்பட்டுள்ளது. வவுனியாவிலுள்ள உறவினர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு பல விண்ணப்பப்படிவங்களை நிரப்பி அவர்களிடம் கையளித்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த பெண் அந்நாட்டில் உயிரிழந்து நான்கு மாதங்கள் 18நாட்கள் கடந்த நிலையில் வெளிநாட்டு வேலையாப்புப்பணியகத்தினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. பணிபுரிந்த வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் அவரது சடலம் சவுதி அரேபியா நாட்டின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. என்ற தகவல் எமக்கு கிடைத்துள்ளது. இதன் பின்னர் பல்வேறு மருத்துவ பரிசோதனைகளின் பின்னர் கடந்த சனிக்கிழமை 29.12.2018 அதிகாலை கொழும்பிற்கு சடலம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

இலங்கைப் பொலிசார், வைத்தியசாலை சட்ட வைத்திய அதிகாரிகளின் அறிக்கையினடிப்படையில் மருத்துவப்பரிசோதனைகள் நீர்கொழும்பில் இடம்பெற்று தற்கொலை என்று தெரிவிக்கப்பட்டு சடலம் சனிக்கிழமை இரவு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை 30.12.2018 அதிகாலை வவுனியாவிற்கு எடுத்துவரப்பட்ட சடலம் வைத்திய அதிகாரிகளின் அறிவுறுத்தல்களினடிப்படையில் அன்றைய தினம் பிற்பகல் உறவினர்களினால் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

குறித்த பெண்ணின் உயிரிழப்புக் குறித்து உறவினர்கள் தெரிவிக்கும்போது,

54வயதுடைய பெண்மணி ஒருவரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் மத்திய கிழக்கு நாட்டிற்கு அனுப்பியது தவறு அத்துடன் பல தடவைகள் முகவருடன் தொடர்புகொண்டு வேலை இடத்தினை மாற்றிதருமாறும் அங்கு துன்புறுத்தல்கள், வேலை அதிகரிப்புக்கள் என பல்வேறு பிரச்சினைகள் உள்ளதை தெரிவித்துள்ளார். 

இதை வெளிநாட்டு முகவர் நிறுவனம் கண்டுகொள்ளவே இல்லை. பின்னர் அவர் உயிரிழந்த விடயம் அவரின் முகவர் நிறுவனத்திற்கு அறிவிக்கப்படவில்லை. 

நாங்கள் எமது உறவினர்களூடாக நான்கு மாதங்களின் பின்னரே தெரிந்து கொண்டோம். மத்திய கிழக்கு நாடு ஒன்றிற்கு பணிப்பெண்ணாக செல்வோர் இலங்கையிலுள்ள பதிவு செய்யப்பட்ட முகவர் நிறுவனங்களை நம்பியே இவ்வாறு செல்வதுண்டு எனினும் அங்குள்ள நிலைமைகள், வேலை விடயங்களை சரி செய்து கொடுப்பதில் இங்குள்ள முகவர்கள் நிறுவனங்கள் கரிசனை கொள்வதில்லை. 

இவ்வாறான முகவர்களின் செயற்பாடுகளினால் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது அவருக்கு அங்கு துன்புறுத்தல்கள், வேலைகள் அதிகரித்த காரணமாகவே அவர் அங்கு தற்கொலை செய்யும் நிலையும் இவ்வாறான ஒரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுவிட்டதாகவும் தற்கொலை செய்து கொள்ளும் நிலையில் அவர் வெளிநாடு செல்லவில்லை என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41