பொலிஸ் நிலைய  அதிகாரிகள் 72 பேருக்கு உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. 

பொலிஸ் மா அதிபரின் பரிந்துரைப்படி பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதிப்படி குறித்த இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளன. 

சேவையின் அவசியம் கருதி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

இடமாற்றம் பெற்றவர்களுள் 27 பிரதான பொலிஸ் பரிசோதகர்களும் 45 பொலிஸ் பரிசோதகர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது