பாகிஸ்தான் பெஷாவர் நகரில் கடுமையாக எலிகள் பெருகியுள்ளதால் அதை  கொல்பவர்களுக்கு சன்மானம் வழங்கப்படும் என அந்நகரின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். 

அங்குள்ள எலிகள் உணவு, உடை, மற்றும்  வீடுகளைக்கூட அரித்து சாப்பிடுகின்றன. அங்கு எலி கடித்ததால் குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.எலிகள் கிட்டத்தட்ட பூனையின் அளவுக்கு இருப்பதனால், பூனைகள் அவற்றை துரத்திப் பிடிக்க அஞ்சுவதால் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கபடுகின்றது.

பெஷாவரில் பிடிக்கப்படும் ஒவ்வொரு எலிக்கும் அரை டொலருக்கு சமமான சன்மானம் வழங்கப்படுவதோடு  இராணுவப் பகுதிகளில் அது மூன்று டொலராக வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.