அனுராதபுரம் நகரத்தில் 18 வயதுடைய  பாடசாலை மாணவி ஒருவரை கடத்திச் சென்ற  35 வயதுடைய திருமணமான நபரையும் கடத்தப்பட்ட மாணவியையும் பொலிஸார் தேடி வருகின்றனர்.

குறித்த மாணவி நண்பிகளோடு மேலதிக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த போது, முச்சக்கரவண்டியில் வந்த சந்தேக நபர் குறித்த மாணவியை தாக்கி பலவந்தமாக  கடத்திச்  சென்றுள்ளனர். 
இதன்பின்னர்  குறித்த மாணவியின் நண்பிகளால் முச்சக்கரவண்டியின்  இலக்கம் குறிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் முச்சக்கரவண்டியை பொலிஸார் கண்டுபிடித்ததுடன், அதன் சாரதியிடம் மேற்கொண்ட விசாரணையின்போது, குறித்த மாணவியை வெஸ்ஸகிரிய பிரதேசத்தில் வைத்து மோட்டார் சைக்களில் ஏற்றி சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.


மாணவியை கடத்திய நபர் அனுராதபுரம் இரண்டாம் கட்டை பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸாரின் ஆரம்ப விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது.