(ஆர்.விதுஷா)

உடதும்பறை பொலிஸ் பிரிவுக்குட்பட பகுதியில் இளைஞரொருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

உன்னஸ்கிரிய- நுகேதென்ன பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் வசிக்கும் இளைஞரொருவரே இவ்வாறு  நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 6மணியளவில் இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

உயிரிழந்தவர்  25 வயதுடைய இல 330-பீ ஹன்னஸ்கிரிய பகுதியை சேர்ந்த  கபுகொடுவே கெதர சம்பத் குமார எனப்படுபவரென அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேற்படி நபர் தனது தலைப்பகுதியிலேயே இவ்வாறு துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

மேலும் , உயிரிழந்தவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கான நீதிமன்ற அனுமதியைப் பெறும் நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்பட்டன.

அதேவேளை தற்கொலைக்கான காரணங்கள் கண்டறியப்படாத நிலையில்  உடதும்பறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.