அருள்நிதி நடிக்கும் புதிய படத்திற்கு ‘K 13’ என்று பெயரிடப்பட்டிருக்கிறது அத்துடன் இதன் ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகியிருக்கிறது.

இதில் அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத், யோகி பாபு, மதுமிதா, ரிஷிகாந்த் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் பரத் நீலகண்டன். இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

சைக்கலாஜிக்கல் மற்றும் மிஸ்ற்ரி திரில்லர் ஜேனரில் ஆக்சன் கலந்து தயாராகியிருக்கும் இந்த படத்திற்கு தர்புகா சிவா இசையமைக்கிறார். அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். முன்னணி படத் தொகுப்பாளரான ரூபன் எடிட்டிங் செய்கிறார்.

இந்த படத்தின் டைட்டில் K 13 என்பது அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டையோ அல்லது ஒரு அறையையோ குறிக்கிறது என்றும், ஃபர்ஸ்ட் லுக்கில் அருள்நிதியின் தோற்றத்தை வைத்துப் பார்க்கும் போது, அவர் பணயம் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது என்கிறார்கள் திரையுலகினர்.

இருப்பினும் இந்த டைட்டிலும் , ஃபர்ஸ்ட் லுக்கும் ஒரு மில்லியன் பார்வையாளர்களை எட்டி சாதனை செய்திருப்பதாக இணையவாசிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

நடிகர் அருள்நிதி தற்போது கரு பழனியப்பன் இயக்கத்தில் ‘புகழேந்தி என்னும் நான் ’என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.