எம்மில் பலருக்கும் சோர்வு ஏற்படும் அதற்கு ஓய்வெடுத்தால் உடனே களைப்பு நீங்கி, புத்துணர்வு பெற்று சுறுசுறுப்பாகிவிடுவோம்.

பிறகு வழக்கமான கடமைகளில் கவனம் செலுத்துவோம். சிலருக்கு ஒய்வெடுத்தாலும் சோர்வு இருந்துக் கொண்டேயிருக்கும். எதற்கெடுத்தாலும் அதிக கோபம் காட்டி, உணர்ச்சி வசப்படுவர். அருகிலுள்ள தண்ணீர் கோப்பையை எடுத்து பருகவே அலட்சியம் காட்டுவர். இவர்கள் தங்களுக்கு நீடித்த சோர்வு நோய் தாக்கியிருப்பதற்கான வாய்ப்பு அதிகம்.

மூட்டு வலி, தற்காலிக நினைவாற்றல் இழப்பு, தலைவலி, தலைச்சுற்றல், எப்போதும் தூங்கி எழுந்தாலும் புத்துணர்வேயில்லாத நிலை, குமட்டல், மன அழுத்தம், மன உளைச்சல், மன இறுக்கம் போன்றவற்றை அறிகுறியாகக் கொள்ளலாம். இத்கைய அறிகுறி வேறு வகையினதான நோயின் அறிகுறியாக இருந்தாலும். நீடித்த சோர்வு நோயிற்கு ஆளாகியிருக்கிறீர்களா என்பதை அறிந்து கொள்ளவேண்டும். இதற்கு தொடர்ச்சியான வைத்திய கண்காணிப்பு தான் பலனளிக்கும்.

சிலருக்கு ஊட்டச்சத்து குறைப்பாட்டின் காரணமாகவும் இவை வரக்கூடும். சிலருக்கு அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி மற்றும் நோயெதிர்ப்பு மண்டலம் காரணமற்ற விடயத்தால் பாதிக்கப்படும் போது இவை வரக்கூடும்.

மன அழுத்தம் அதிகமானாலும் இவை வரக்கூடும். அதனால் இத்தகைய பாதிப்புகள் இருந்தால் அதனை வைத்தியரிடம் எடுத்துரைத்து இதற்கான சிகிச்சையை பெற்றுக்கொள்ளவேண்டும்.

இதற்கான துல்லிய வைத்திய சிகிச்சை இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை என்றாலும், நோயெதிர்ப்பு சக்தியை வலுவூட்டக்கூடிய சிகிச்சையை அளித்து இதனை கட்டுப்படுத்தலாம்.பின்னர் ஆரோக்கியமான வாழ்க்கை நடைமுறையை மாற்றியமைத்து அதன் படி நடந்தால் இதிலிருந்து விரைவில் முழுமையான நிவாரணம் கிடைக்கும்.