சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டில் தயாரிக்கும் ஒரு தொகை சிகரெட்டுக்களை  இலங்கைக்குள் கொண்டு வர முயற்சித்த  சந்தேக நபரை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 

குளியாப்பிட்டியைச்  சேர்ந்த  24 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே செல்ல முற்பட்டபோது அவரின்  நடத்தையில் சந்தேகம் கொண்ட சுங்க அதிகாரிகள், குறித்த நபரின் பயணப்பொதியை சோதனையிட்டபோது ஒரு தொகை வெளிநாட்டு சிகரெட்டுக்களை மீட்டுள்ளனர். 

150 பொதிகளில் சுமார் 16 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட  மூன்று வகையான  30 ஆயிரம் அடங்கிய சிகரெட் பக்கெற்றுக்களை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.