அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 622 ஓட்டங்களை குவித்துள்ளது.

நேற்று சிட்டினியில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி, நேற்றைய முதலாம் நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 303 ஓட்டங்களை குவித்திருந்தது.

புஜாரா 130 ஓட்டத்துடனும், விகாரி 39 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். 

இந் நிலையில் 303 ஓட்டத்துடன் முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இந்திய அணி உணவு இடைவேளையின் முன்பு 5 விக்கெட் இழப்பிற்கு 389 ஓட்டங்களை குவித்ததுடன், ஓட்டட எண்ணிக்கை 622 ஆக இருந்தபோது ஜடேஜா ஆட்டமிகழக்க ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

இந்திய அணி சார்பாக புஜார 193 ஓட்டங்களையும், ஜடேஜா 81 ஓட்டங்களையும், அகர்வால் 77 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றதுடன் ரிஷாத் பந்த் 159 ஓட்டத்துடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணி சார்பாக நேதன் லியோன் 4 விக்கெட்டுக்களையும், ஜோஷ் ஹாஸ்லேவுட்  2 விக்கெட்டுக்களையும், மிட்செல் ஸ்டார்க் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.