பிரபல நடிகையின் உடல் ஆற்று பாலத்தின் அடியில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளது.

ஓடியா ஆல்பம் நடிகை சிம்ரன் சிங்கின் உடல் நேற்று மகாநதி ஆற்றின் குறுக்கேயுள்ள பாலத்தின் அடியில் கிடந்துள்ளது. சிம்ரன் இதுவரை பல சம்பல்பூர் ஆல்பம் பாடல்களில் நடித்துள்ளார்.

சடலத்தை கண்டதும் பொலிஸாசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பொலிஸார் பார்த்தபோது அவரது முகம் மற்றும் தலையில் அதிகம் காயங்கள் இருந்துள்ளது.

உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். அவரை கொலை செய்தது யார், என்ன காரணம் என பொலிஸார் பல்வேறு கோணங்களில், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த நடிகையின் குடும்பத்தினர் அவரின் கணவர் தான் கொலை செய்துள்ளார் என பொலிஸாரிடம் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.