பௌத்த மத புனித நூலான திரிபீடகத்தை தேசிய மரபுரிமைச் சின்னமாக பிரகடனப்படுத்துவதற்கான தேசிய தினம் நாளை சனிக்கிழமை மாத்தளை அலுவிகாரையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் அஸ்கிரி, மல்வத்தை பீடங்களின் மஹாநாயக்கர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளதுடன், சுமார் 2000 பௌத்த மதகுருமார்கள் மற்றும் வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிக்கு மதிப்பளிக்கும் வகையில் சகல வீடுகளிலும், அரச நிறுவனங்களிலும் பௌத்த கொடியை பறக்க விடுமாறு புத்தசாசன அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
உலகில் உள்ள சமய நூல்கள் மத்தியில் பௌத்த திரிபீடகத்திற்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. கிறிஸ்துவுக்கு முன்னர் முதலாம் நூற்றாண்டில் வலகம்பா மன்னரின் ஆட்சிக்காலத்தில் திரிபீடகத்திற்கு நூல் உருவம் கொடுக்கும் முயற்சி ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM