ஆறு நூல்கள் அறிமுக நிகழ்வும் அரசியல் கருத்தரங்கும் யாழ்ப்பாணம் பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ( 6/1) பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவிருக்கிறது.    

தற்போது பிரான்சில் வசிக்கும் வி.ரி இளங்கோவனின் ஈழத்து மண் மறவா மைந்தர்கள், என்வழி தனிவழி அல்ல, ஔிக்கீற்று, பாரதிநேசன் வீ.சின்னத்தம்பி எழுதிய ஈழத்தின் வடபுலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியில் தமிழ்ப் பெண்கள் , பத்மா இளங்கோவனின் செந்தமிழ் குழந்தைப் பாடல்கள், செந்தமிழ் பாப்பாப் பாடல்கள் என்ற நூல்களே அறிமுகம் செய்யப்படவிருக்கின்றன.

பேராசிரியர் அ.சண்முகதாஸ் தலைமையில் நடைபெறவிருக்கும் இந்த நிகழ்வில் கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சி.பாஸ்கரா வாழ்த்துரையையும் கருணாகரன், தி.சிறீதரன் ( சுகு) , கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோர் நூல் அறிமுக உரைகளையும் இளங்கோவன் ஏற்புரையையும் நிகழ்த்துவர்.

இரண்டாவது அமர்வாக ' தோழர் என்.சண்முகதாசன் வழிவந்த சிந்தனைகளும் சமகாலப் பொருத்தப்பாடும் ' என்ற தலைப்பிலான அரசியல் கருத்தரங்கு இடம்பெறும். 

எம்.ஏ.சி.இக்பால் தலைமையிலான இந்த கருத்தரங்கில் கம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தைச் சேர்ந்த சட்டத்தரணி இ.தம்பையா, டபிள்யூ.சோமரத்ன, பத்திரிகையாளர் வீரகத்தி தனபாலசிங்கம் ஆகியோர் உரையாற்றுவர். இலங்கை முற்போக்கு மக்கள் இயக்கம் இரு நிகழ்வுகளையும் ஏற்பாடு செய்திருக்கிறது.