(நா.தனுஜா)

நாட்டின் நிதி நிலைமை தொடர்பில் நாட்டு மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பு நிதியமைச்சருக்கு உள்ளது. அந்தவகையில் பெப்ரவரி மாதமாகும் போது அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி 200ஆக அதிகரிக்காது என நிதியமைச்சர் நாட்டு மக்களுக்கு உறுதியாகத் தெளிவுபடுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றேன் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை மத்திய வங்கியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது ரூபாவின் பெறுமதி ஏப்ரல் மாதமளவில் 200ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றமை தொடர்பில் மத்திய வங்கி ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியிடம் வினவப்பட்டது. 

அந்தக் கேள்விக்கு நேரிடையாகப் பதிலளிக்காத ஆளுநர், தற்போது அதனை சரிவரக் கூறமுடியாது என்றவாறு பதிலளித்தார். இந்நிலையில் ரூபாவின் பெறுமதி தொடர்பாக முன்னாள் ஆளுநரிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.