(இராஜதுரை ஹஷான்)

வெளியாகியுள்ள  கல்விப் பொதுதராதர  உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பிரகாரம் கலை பிரிவில் தேசிய  மட்டத்தில்  முதலிடத்தை பிடித்த சர்வதேச பாடசாலை மாணவி   தொடர்பில் பாராளுமன்ற  உறுப்பினர்  பந்துல குணவர்தன குறிப்பிட்ட  கருத்தானது வன்மையாக கண்டிக்கத்தக்கது. 

அவரது கருத்தானது அடிப்படை தகைமையற்றதுடன், அரசியல் நோக்கத்திற்காக இலசவ  கல்வியை கேலிக்கூத்தாக்குவது வெட்கக்கேடான செயற்பாடாகும் என  கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் அறிக்கை  வெளியிட்டுள்ளார்.

சர்வதேச பாடசாலை மாணவி  கலை பிரிவில் முதலிடம் பிடித்தமை அரசியல்  சூழ்ச்சி என்று   பாராளுமன்ற  உறுப்பினர்  பந்துல குணவ்தவின்  தர்க்கம்  தொடர்பில்   வெளியிட்டுள்ள விசேட  அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மாணவர்களுக்கு  அரச அல்லது  தனியார்  பாடசாலைகளில்  கல்வி பயில்வதற்கான பூரண உரிமை  காணப்படுகின்றது. அதனை எவராலும் தடுக்க முடியாது. கடந்த  அரசாங்கத்தில்  வெறும்   காட்சிப்படுத்தலுக்கு  மட்டுப்படுத்தப்பட்டிருந்த இலவச கல்வி தற்போது செயற்திறன் மிக்க பெறுபேறுகளை பெறும் அளவிற்கு  தலைமைத்துவம் வழங்கப்பட்டுள்ளது.  இதற்கு அண்மைய பாடசாலை செயற்திட்டம் சிறந்த எடுத்துக்காட்டாகும்.