நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 45 ஓட்டங்களினால் தோல்வியை தழுவியுள்ளது.

மௌனன்குயினில் ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற நியூஸிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 371 ஓட்டங்களை குவித்தது.

372 என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு தனுஷ்க குணதலிக்க  மற்றும் திக்வெல்ல ஆகியோர் சிறந்ததொரு ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்தனர். இவர்கள் இருவருமாக இணைந்து முதலாவது விக்கெட்டுக்காக 119 ஓட்டங்களை குவித்தவேளை 17.4 ஆவது ஓவரில் குணதிலக்க 43 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அத்துடன் இவருடன் கைகோர்தாடி வந்த திக்வெல்லவும் 19.1 ஆவது ஓவரில் நீஷாமினுடைய பந்து வீச்சில் 50 பந்துகளுக்கு 8 நான்கு ஓட்டங்கள் மற்றும் 3 ஆறு ஓட்டங்களை பெற்றிருந்தவேளை 76 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து வெளியேறினார். 

இதன் பிறகு மூன்றாவது விக்கெட்டுக்காக களமிறங்கி துடுப்பெடுத்தாடிய குசல் ஜனித் பெரேரா போட்டியில் தொடர்ந்தும் அதிரடி காட்ட, ஏனைய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர், அதன்படி குசல் மெண்டீஸ் 18 ஓட்டத்துடனும், தினேஷ் சந்திமால் 10 ஓட்டத்துடனும், அசேல குணரத்ன 11 ஓட்டத்துடனும், திஸர பெரேரா 4 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேற இலங்கை அணி 42 ஓவர்களக்கு 6 விக்கெட்டுக்களை இழந்து 273 ஓட்டங்களை பெற்றது.

அதனைத் தொடர்ந்து போட்டியில் அதிரடி காட்டி வந்த திஸர பெரேரா 86 பந்துகளை எதிர்கொண்டு ஒரு ஆறு ஓட்டம், 13 ஓட்டம் அடங்களாக 102 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்து வெளியேறினானர்.

இறுதியில் இலங்கை அணி 49 ஓவரில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 326 ஓட்டங்களை பெற்று 45 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

பந்து வீச்சில் நியூஸிலாந்து அணி சார்பாக ஜேம்ஸ் நீஷன் 3 விக்கெட்டுக்களையும், ட்ரென்ட் போல்ட், லாக்கி பெர்குசன், ஈஷ் சோதி ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் மற்றும் மாட் ஹென்றி ஒரு விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

 

இதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் நியூஸிலாந்து அணி 1:0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.