(எம்.மனோசித்ரா)

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினைக்கு அடுத்த வாரத்திற்குள் தீர்வு காணப்படும். பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதோடு, வெகுவிரைவில் இதற்கான தீர்வு வழங்கப்பட வேண்டும் எனவும் பணிப்புரை விடுத்துள்ளார் என பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சர், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்க பொதுச் செயளாலர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

அடிப்படை சம்பளம் 700 ரூபாவாக கூட்டு ஒப்பந்த்தில் தொழிற்சங்கங்கள் கைசாத்திடவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் செய்திகள் தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

தொடர்ந்தும் அவர் குறிப்பிடுகையில், 

வெகு விரைவில் இந்த பிரச்சினைக்கான தீர்வு காணப்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளமைக்கு இனங்க அதற்கான முயற்சிகளை நாம் முன்னெடுத்து வருகின்றோம். 

அத்தோடு நிலுவைப் பணம் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இம்முறை வேதன அதிகரிப்புடன் நிலுவைப்பணத்தையும் பெற்றுக்கொடுப்பதில் தொழிற்சங்கங்கள் உறுதியாகவுள்ளன.