யாழ்ப்பாணத்தில் ஒரு தொகை வெடி மருந்துகளுடன் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

யாழ்பாணம் பஸ்  தரிப்பிடத்தில் சி-4 ரக ஒரு கிலோ கிராம் வெடி மருந்துகளுடன் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

குறித்த சந்தேக நபர் வெடிமருந்துகளுடன் கொழும்பு செல்லும் பஸ்ஸிற்காக காத்துக்கொண்டிருந்த போது அவரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு பரிசோதனை செய்த போது ஒரு தொகை வெடிமருந்துகளை உணவுப் பொதிபோன்று வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த சந்தேக நபரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் யாழ்ப்பாண  பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபர் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.