மஸ்கெலியா நகர் வாசிகள் குப்பைகளை சுத்திகரிப்பு பணியாளர்களிடம் முறையாக வழங்காமல் தனியார் காணிகள் வீசுவதால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியத்திற்கு முகம் கொடுத்து வருகின்றனர்.அத்துடன்  அக்குப்பைகளால் துர்நாற்றம் வீசுவதுடன் நுளம்புகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் இராஜ்குமார் கூறுகையில்,நாம் தினந்தோறும் குப்பைகளை பார ஊர்தியில் சேகரித்து வருகின்றோம் ஆனாலும் சிலர் முறையாக குப்பைகளை வழங்காமல் இவ்வாறான செயற்பாடுகளை செய்கின்றனர்.இவ்வாறு குப்பைகளை முறையாக வழங்காமல் தனியார் காணிகளில் வீசுபவர்கள் யார் என்று தெரியவருமாயின் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.