கொட்டகலையில் பாரிய விபத்து

Published By: Robert

01 Apr, 2016 | 09:48 AM
image

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் காயங்களுக்குள்ளான 13 பேர் கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று காலை 7.30 மணியளவில் ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொமர்ஷல் மேபீல்ட் சந்தியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

ஹட்டனிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற கார் ஒன்றுடன் கொட்டகலையிலிருந்து ஹட்டன் குடாஓயா பகுதிக்கு சென்ற லொறி ஒன்று நேர்க்கு நேர் மோதியுள்ளது.

கொட்டகலை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதிக்கு ஆடை தொழிற்சாலை ஒன்றுக்கு ஊழியர்களை ஏற்றிச்சென்ற குறித்த பஸ் ஒன்றை மேற்படி லொறி முந்திச்செல்ல முற்பட்ட போதே காருடன் மோதி இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.

அத்தோடு எனினும் குறித்த லொறியுடன் பஸ் மோதுண்டதால் பஸ்ஸில் பயணித்த 13 பேர் காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதில் 3 பேர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லொறியின் சாரதியை கைது செய்ய நடவடிக்கைகள் எடுத்திருப்பதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

(எமது நிருபர்கள்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42
news-image

யாழ்.கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு...

2024-04-18 12:40:37