2019 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது. 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 6.00 மணியளவில் இடம்பெறவுள்ள இக் கூட்டத்திற்கு கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது கட்சியின் எதிர்கால அரசியல் வேலைத்திட்டங்கள், எதிர்வரும் தேர்தல்களை இலக்கு வைத்து கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மறுசீரமைப்பு தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.