மன்னாரில் இன்று காலை 9.00 மணிமுதல் மாலை 5.00 மணிவரையான எட்டு மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

பிரதான நீர் விநியோகக் குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப் பணிகள் காரணமாகவே இந்த நீர்வெட்டு மேற்கொள்ளப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி மன்னார் நகர் மற்றும் நகரை அண்டிய பகுதிகளான பள்ளிமுனை, சவுத்பார், தாழ்வுப்பாடு, கீரி, தாராபுரம், புதுக்குடியிருப்பு, கரிசல், எருக்கலம்பட்டி, சாந்திப்புரம், எழுத்தூர், மோர் வீதி, பெட்டா, மற்றும் உப்புக்குளம் ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.